Optical Illusion: 10 வினாடிகளில் நாயை கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி
உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க நீங்கள் தயாரா? வெறும் 10 வினாடிகளில் உங்களால் கீழ்க்கண்ட புகைப்படத்தில் இருந்து நாயை கண்டறிய முடியுமா?
Optical Illusion புகைப்படங்களின் மூலம் உங்கள் அறிவுத்திறனை பரிசோதிக்கலாம், உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாத அளவுக்கு மாயாஜால வித்தையை காட்டிவிடும்.
இப்படங்களை பார்க்கும் போது அதை நம் மூளை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை பொறுத்தது, உளவியல் பகுப்பாய்வில் இப்படங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது நம் மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்வதால், ஒருவரின் அறிவுத்திறன், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளை தெரிந்து கொள்ள முடிகிறது.
அப்படியொரு புதிரான படத்தையே இப்போது பார்க்கப் போகிறோம், இந்த படத்தில் சிறுமி ஒருத்தி சோஃபாவில் அமர்ந்திருக்கிறாள்.
அவளை சுற்றி வெவ்வேறு நிறங்களில் நிறைய பூனைகள் இருக்கின்றன. அதில் மறைந்துள்ள ஒரே ஒரு நாயை மட்டும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் .
10 வினாடிகள் தான் உங்களுக்கான நேரம், ஒவ்வொரு பூனையையும் கவனமாக பார்த்து கண்டுபிடிக்கவும்.
கூர்மையான பார்வை இருப்பவர்களால் மட்டுமே இதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும்.
உங்களுக்காக சின்ன Clue ஒன்றை தருகிறோம், சுவரில் உள்ள பூனைகளை கொஞ்சம் கவனமாக பார்த்தால் உங்களால் நாயை கண்டுபிடிக்க முடியும். நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க அந்த நாயை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.