சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை சிம்ரனின் மகன்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசீகரமான அழகால் தன்வசப்படுத்தியவர் நடிகை சிம்ரன்.
2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த சிம்ரன், பல சூப்பர்ஹிட்டான படங்களை கொடுத்திருக்கிறார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முக்கிய கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
இதன் பின்னர் சினிமாத்துறையில் இருந்து சற்று விலகி இப்போது குடும்பம் குழந்தை என வாழத்தொடங்கி விட்டார், அவ்வப்போது தனது மகன்கள் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.
அந்தவகையில் சமீபத்தில் தனது இரு மகன்களது புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் வளர்ந்துவிட்டதால், சிம்ரனின் மகன்களா இது என பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர், சிம்ரனின் அழகிய குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.