உங்கள் வீட்டில் இந்தப் பொருட்கள் இருந்தால் பொருளாதாரம் ஈடேறாது!
சில பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு சரியில்லை என்று பெரியோர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம்.
அதுபோல வீட்டில் தேவையில்லாத சில பொருட்கள் இருந்தால் தூக்கி எறியுங்கள். இல்லையேல் உங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என வாஸ்து சாஸ்த்திரம் சொல்கிறது.
வாழ்க்கையில் நிம்மதியில், வீட்டில் இவ்வளவு பிரச்சினை, எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கஷ்டம் வந்துக்கொண்டே இருக்கிறது என நம்மில் பலர் புலம்பிக்கொண்டே இருப்போம்.
இதற்கு காரணம் நாம் வீட்டில் வைத்திருக்கும் சில எதிர்மறையான பொருட்கள் தான்.
வீட்டிற்கு இவை வேண்டாம்
வீட்டில் வழிபாட்டு அறையில் கிழிந்த, பழைய படங்கள் அல்லது உடைந்த சிற்பங்கள் போன்றவைகள் இருந்தால் உடனடியாக வீட்டிலிருந்து அப்புறப்படுத்துங்கள் இல்லையேல் வீட்டில் நிதியிழப்பு ஏற்படும்.
அதேபோல் வீட்டில் கிழிந்த அல்லது பழைய ஆடைகள் மற்றும் பழைய காலணிகள் இருக்குமாயின் அவற்றையும் அப்புறப்படுத்தி விடுங்கள் இதனால் வீட்டில் நிதி சிக்கலும் ஒரு நபர் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
புறா வீட்டில் கூடு கட்டினால் பொருளாதார முன்னேற்றம் தடை ஏற்படும்.
வீட்டில் மகாபாரதப் போர் படங்கள், நடராஜர் சிலை, தாஜ்மஹால் படம், மூழ்கும் படகு, நீரூற்றுகள், வன விலங்குகளின் படங்கள், கல்லறைகள், முள் மரங்களின் படங்கள் இருந்தால் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் நடப்பது தடைபடும்.
வீட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் வீட்டில் எதிர்மறை சக்தியை கொண்டு வரும்.
செயலிழந்த கடிகாரம் மற்றும் பழுதடைந்த கடிகாரம் இருந்தால் பணி இடங்களில் நிம்மதி கிடைக்காது.
வீடு முழுவதும் பழைய செய்தித்தாள்கள் இருந்தால், தூசி மற்றும் அழுக்கு பொருளாதார நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
நாம் வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க அதிக கவனம் கொடுக்க வேண்டும். இல்லையேல் வீட்டில் எதிர்மறை விளைவுகளும் எதிர்மறை ஆற்றல்களும் உண்டாகும்.