மாங்கல்யம் தவறுவது போன்று கனவு வருகிறதா? அப்போ உடனடியாக இதை மட்டும் பண்ணுங்க!
பெண்களின் கழுத்தை அலங்கரிப்பதற்கு பல அலங்காரப் பொருட்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவர்களுக்கு மதிப்பையும் மரியாதையும் கொடுப்பது மாங்கல்யம் தான்.
இதனை கழுத்தில் அணிந்திருக்கும் புதிய நம்பிக்கை கிடைக்கிறது. நம்முடன் இனைந்து பயணிக்கும் ஒரு துனை என்றே கூறலாம்.
மேலும் மாங்கல்யத்திற்கு எதிரான கனவுகள் வரும் போது அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பது ஐதிகம்.
இதன்படி, மாங்கல்யம் தொடர்பான எதிர்மறையான கனவுகள் வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
எதிர்மறையான கனவுகள்
1. மாங்கல்யப் பொருட்கள் தவறுதல்
பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பின்பு தான் தாலி, திருமண மோதிரம், மெட்டி, குங்குமம், மாலை போன்ற பொருட்களை பயன்படுத்துவார்கள்.
இதில் கையிலிருந்து தவறுவது போன்று கனவுகள் வந்தால், இது ஆபஷ்டகுணம் என்பார்கள். குறிப்பாக திருமணம் நடந்த புதியதில் இது போன்று ஏற்படுவது சற்று சிந்திக்கக்கூடிய விடயமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற கனவுகள் ஏற்படும் போது திருமணம் தொடர்பான நேத்திகடன்கள் செய்யாமல் இருக்கிறது என்று அர்த்தம். தவறிய பொருளைக் கொண்டு அதனை சரிச் செய்ய வேண்டும்.
2. தாலி கழடுதல் போன்ற கனவுகள்
திருமணமான பெண்களுக்கு இது போன்ற கனவுகள் ஏற்பட்டால், திருமண வாழ்க்கை அதிருப்தியாக இருக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள் கணவனைவிட்டு விலக நினைக்கிறீர்கள் இது உங்கள் அடி மன ஆசை என்றும் கூறலாம். திருமணமாகாத பெண்களுக்கு இது போன்று கனவு வந்தால், நீங்கள் திருமணம் குறித்து யோசித்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
மேலும் கனவுகள் தொடருமாயின் உங்களுக்கு தோசங்கள் இருக்கிறது என்றும் திருமணம் குறித்து பயத்தில் இருக்கின்றீர்கள் எனவும் கூறலாம்.
3. திருமணம் நிற்பது போன்ற கனவுகள்
திருமணம் ஆயத்தம் செய்யும் போது இது போன்ற கனவுகள் ஏற்படுமாயின் உடனடியாக திருமண ஆயத்தங்களை நிறுத்த வேண்டும்.
மணப்பெண் சற்று கவனத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் திருமணத்தில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்றும் பெரியவர்கள் கூறுவார்கள்.