கடன் பிரச்சினையிலிருந்து விடபட வேண்டுமா? செவ்வாய் கிழமையில் இதை கண்டிப்பா செய்ங்க
பொதுவாக வீட்டில் பணம் கஷ்டம் ஏற்பட்டால் வெளியில் தெரிந்த நபர்களிடம் கடன் வாங்குவதை பழக்கமாக வைத்திருப்போம்.
ஆனால் நாம் சம்பாதித்து வரும் பணத்தில் எந்தவொரு சேமிப்பு இல்லாமலும், வரும் அனைத்தையும் செலவு செய்துவிட்டு மாதத்தின் மீத நாட்களை கடன் வாங்கி கழிக்கும் நிலை அதிகமாகவே இருந்து வருகின்றது.
ஆனால் இவ்வாறு கடன் வாங்குவதை நாம் வழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. இங்கு வீட்டில் கடன் வாங்காமல் இருப்பதற்கு சில பரிகாரங்களை செய்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது.
பரிகாரம் என்ன?
கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பவர் முருகப்பெருமாள். செவ்வாய் இவருக்கு உகந்த நாள். இந்நாட்களில் நீங்கள் ராகு காலத்தில் நீங்கள் செய்யும் பூஜைகளுக்கு ஆற்றல் அதிகமாம்.
செவ்வாய் கிழமையில் வருகின்ற ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வந்தால் எப்படிப்பட்ட கடன் சுமையாக இருந்தாலும் அகலும்.
இதுபோன்று ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை போட்டு வழிபாடு செய்தாலும் கடன் பிரச்சினை அகலும்.
முதல் செவ்வாய் ஹோரை என்று கூறப்படும் செவ்வாய்க்கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பச்சைப்பயிறு, ஒன்றுடன் வெல்லம் சேர்த்து பாயாசம் செய்து படையல் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இரண்டாவது செவ்வாய் ஹோரை என்று கூறப்படும் நேரம் பகல் 1 மணி முதல் 2 மணி வரை இதே போன்று படையல் போட்டு பின்பு கோமாதாவிற்கு தானம் கொடுக்க வேண்டும். யார் பெயரில் கடன் இருக்கின்றதோ அவர்கள் இந்த தானத்தினை செய்ய வேண்டும்.
மூன்றாவது செவ்வாய் ஹோரை என்று கூறப்படும் நேரம் மாலை 6 மணிக்கு மேல் வீட்டு பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வழக்கமாக ஏற்றும் தீபத்தினை தவிர்த்து, அகல் விளக்கில் நெய் தீபம் முருகனுக்கு ஏற்ற வேண்டும். இதன் முன்பு நின்று கடன் சுமை தீர வேண்டும் என்று வணங்கினால் கடன் விரைவில் அடைந்துவிடுமாம்.