மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்குகளை செய்தது யார் தெரியுமா?
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விவேக், பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பிரபலங்கள் பலரும் விவேக்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது கலை மற்றும் சமூக சேவையை பாராட்டி அவரது உடல் போலீஸ் மற்றும் முழு அரசியல் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்தது.
இதன்படி மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், சுமார் 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, அவரது உடலுக்கு மகன் ஸ்தானத்தில் மகள் தேஜாஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார்.
விவேக்கின் இறுதி ஊர்வலத்திலும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர், அதிலும் பெரும்பாலான ரசிகர்கள் மரக்கன்றுகளை ஏந்தியபடி பங்கேற்றது பலரையும் நெகிழ வைத்தது.