கங்காருகள் சண்டையிடுவதை பார்ததுண்டா? பதறவைக்கும் காட்சி
இரண்டு கங்காருகள் ஒன்றுடன் ஒன்று கடுமையாக மோதலில் ஈடுப்படும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பொதுவாக கங்காருக்கள் மிகவும் கோபமான விலங்குகள் என கூறப்படும். அமைதியாக இருக்கும் கங்காருகள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே கோபம் அடைந்து மோசமாக தாக்க ஆரம்பித்துவிடும்.
இதன் மூர்க்கத் தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்பது கடினமான செயல்.அவற்றின் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், கூர்மையான நகங்கள் மற்றும் தசைநார் முன்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அவை பலமான தாக்குதலை மேற்கொள்ளும்.
குறிப்பாக இந்த சண்டைகள் படிநிலை மற்றும் பிரதேசத்தை நிறுவுவதற்காக இடம்பெறுகின்றன. அவை துணையை அணுகுவற்கும் சண்டையிடுகின்றன. பலவீனமான ஆண் கங்காரு இறுதியில் பின்வாங்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
