டிரெண்டாகும் FIFA இட்லி! வைரல் புகைப்படங்கள்
உலகம் முழுவதும் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அந்தவகையில் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரின் 5 முக்கிய நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
1930ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
FIFA iddlies , dedicated to all football fans (Fiddlies) pic.twitter.com/KRPcJCc42Z
— Anu Satheesh ?? (@AnuSatheesh5) November 27, 2022
இந்நிலையில் கால்பந்து போட்டியை வரவேற்கவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் FIFA இட்லி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
புதுவையில் பிரபல ஹொட்டல் ஒன்றில் தயாராகும் இந்த இட்லிக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.
சாதாரண இட்லி போன்று அல்லாமல் பெரிய இட்லியில் கால்பந்து போன்ற அச்சினை பயன்படுத்தி FIFA இட்லி தயாராகிறது.
வகை வகையான சட்னியுடன், சூடாக பரிமாறப்படும் ஒரு இட்லியின் விலை ரூ.90 ஆகும், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி ருசித்து வருகின்றனர்.