நாய்களிடம் சிக்கிய பச்சிளம் குழந்தையின் பரிதாபநிலை! பெற்றோர்களே இந்த தவறை செய்யாதீங்க
வீட்டில் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிர்ச்சி காட்சியே இதுவாகும்.
குறித்த பகீர் காட்சியில் கைக் குழந்தை ஒன்று தனது வீட்டின் கதவு திறந்திருந்ததால், ஊர்ந்தபடி வெளியே வந்துள்ளது. சற்று இருட்டான நேரத்தில் தவழ்ந்து வந்த குழந்தையை அவதானித்த நாய் சுற்றி வளைத்துள்ளது.
ஆரம்பத்தில் குரைத்துக் கொண்டிருந்த ஒரு நாயைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 2 நாய்கள் வந்து, குழந்தையின் கால்களை தனித்தனியாக பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.
பின்பு நாயின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டியடித்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர். குறித்த காட்சி குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை காட்டியுள்ளது.