3 கிலோ வரை தொப்பையை குறைக்கும் தேநீர்! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..
பொதுவாக காலங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப உணவு வகைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும்.
கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
மேலும் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்கி இருக்கும் பொழுது வேலைகளை செய்து கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும்.
எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். டயட்டுடன் சேர்த்து சில வீட்டு வைத்தியம் முறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.
இதன்படி, தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது வெந்தயம் கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும்.
அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகளையும் வெந்தய தண்ணீரை எப்படி தயாரிக்கலாம்? என்பதனை தெரிந்து கொள்வோம்.
வெந்தய தண்ணீர்
1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெந்தயம் போட்டு 15 முதல் 20 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
2. தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பது நல்லது.
3. வெந்தயத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதற்கு முடியாதவர்கள் டீயுடன் கலந்து குடிக்கலாம்.
4. வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய டீ குடித்துவர மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
5. செரிமானப் பிரச்சினைகள், அல்சர் ஆகிய பிரச்சினைகளிலிருந்து விடுபட நினைப்பவர்கள் வெந்தய டீ குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |