தலையில் இருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மருந்தாகும் வெந்தயம்.. அப்படி என்ன இருக்கின்றது? தெரிஞ்சிக்கோங்க!!
பொதுவாக பெண்கள் அவர்களின் முக அழகை விட தலைமுடி பராமரிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.
சில முறையற்ற பராமரிப்பால் தலைமுடி ஒரு குறுகிய காலத்தின் பின் உதிர ஆரம்பிக்கும்.
இவ்வாறு உதிரும் பொழுது வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு எண்ணெய் செய்து பராமரிக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டு பொருட்களும் தலைமுடி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்பு வகிக்கின்றது.
அந்த வகையில் வெந்தயத்தை பயன்படுத்துவதால் அப்படி என்ன நன்மைகள் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வெந்தயத்தை ஏன் தலைக்கு போடுகிறார்கள்?
Image - timesofindia
1. முடி வளர்ச்சியடைக்கின்றது
தலைமுடி வளர்ச்சியை துண்டுகின்றது என மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள். ஏனெனின் வெந்தயத்தில் தலைமுடிக்கு தேவையான இரும்புச்சத்து, புரதம் ஃபிளாவனாய்டுகள் ஆகிய ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பொடுகு மற்றும் பிற பூஞ்சை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வை பெற்று தருக்கின்றது.
2. முடியின் பராமரிப்பை மேம்படுத்தும்
அதிகமான தலைமுடி பிரச்சினை இருக்கும் பொழுது வெந்தயம் தலைக்குள் இருக்கும் வேர்களை ஊக்கப்படுத்துகின்றது. இதனால் தடைப்பட்ட தலைமுடி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
3. உச்சந்தலையில் சிகிச்சை
தலையில் சிலருக்கு ஒவ்வாமை, பொடுகு, வரட்சி என பல பிரச்சினைகள் இருக்கும். இதற்கு எங்கு மருந்து எடுத்தாலும் சரியாகமல் இருக்கும். வெந்தயத்தை தலையில் தடவுவதன் மூலம் தலைக்கு தேவையான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |