தலைமுடி பராமரிப்பு: குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீங்க!
இன்றைய காலத்தில் ஆண் பெண் இருபாலரும் தலைமுடியை பராமரிப்பதில் கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு, மன அழுத்தம், சரியான பராமரிப்பின்மை உட்பட பல காரணங்களினால், முடி உதிர்ப்பு, பொடுகு தொல்லை பிரச்சினை ஏற்படுகின்றது.
தலைக்கு குளிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?
ரசாயனம் குறைந்த ஷாம்புவை பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். மேலும் ஷாம்புவை அப்படியே முடி மற்றும் தலையில் போடாமல், தண்ணீரில் கலந்து கொண்டு தேய்க்க வேண்டும்.
தலைக்கு குளிக்கும் போது தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும். அப்போது அதிக வறட்சி இல்லாமல் இருக்கும்.
தலைமுடியை பாதுகாக்க முட்டை வெள்ளைக்கரு, மருதாணி என இயற்கையான ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
ஷாம்பு பயன்படுத்திய பின்பு கட்டாயம் கண்டிஷ்னர் பயன்படுத்தவும். கண்டிஷ்னரை தலைக்குள் படாதவாறு தேய்க்கவும்.
தலை காயும் முன்பு தலையில் சீப்பு போடுவதை தவிர்க்கவும்.
மெல்லிய டவள் வைத்து தலைமுடியை மெதுவாக துடைத்து எடுக்கவும், அழுத்தி துடைக்க வேண்டாம்.
உடலில் வெப்பம் அதிகரித்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும். ஆதலால் இந்த காலங்களில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பழங்களை நன்கு எடுத்துக்கொள்ளவும். மேலும் சீரம் பயன்படுத்தி தலைமுடியை வறட்டிசியினை தவிர்க்கலாம்.