உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாற்றும் வெந்தயம்.. ஜிம் செல்பவர்கள் சாப்பிடலாமா?
பொதுவாக மசாலாக்கள் சமையலில் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது என பலரும் யோசித்து கொண்டிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி அவற்றில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கின்றன.
மூலிகை பொருட்கள் உணவு வகைகளுக்கு தனித்துவமான நறுமணம் மற்றும் சுவையை தருகின்றது. இவ்வாறு சேர்க்கப்படும் பொருட்களில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன.
அந்த வகையில் கறிகளுக்கு அதிகமாக சேர்க்கப்படும் வெந்தயத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள் என்பவை பற்றி தெரிந்து கொள்வோம்.
மிக பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாக வெந்தயம் கருதப்படுகிறது.
இதில் நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் மற்றும் பல செயல்பாட்டு கூறுகள் உள்ளன. வெந்தயத்தை ஊற வைத்து தண்ணீர் குடிப்பதால் உடல் எடை கணிசமாக குறைக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி,
1. செப்பு கிளாஸ் தண்ணீர்+ வெந்தயம் இரண்டையும் ஒன்றாக கலந்து இரவில் ஊற வைத்து விட்டு காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ராலை கட்டுப்படுத்தும்.
2. சிற்றுண்டிகள் சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள் காலையில் முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இது செரிமானத்தை சீர்படுத்தும்.
3. வெந்தயத்தை கழுவி, ஈரமான துணியில் மூடி, இரண்டு அல்லது மூன்று இரவுகள் அப்படியே விடவும். பின் இவை முளைத்த பிறகு பயன்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |