சோம்பு பக்கவிளைவை ஏற்படுத்துமா?
உணவில் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சோம்பு
செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் சோம்பு, வயிற்றுப்போக்கு, வயிறு வலி, குமட்டல் மற்றும் அஜீரணத்திற்கு மருந்தாக இருக்கின்றது.
இதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் செரிமான சாறுகளின் சுரப்பை அதிகரித்து வாயு பிரச்சினை, செரிமான பிரச்சினையை தீர்க்கின்றது.
மேலும் இருமல், தொண்டடை புண், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றது.
இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்து போராடுகின்றது.
ஆனால் அதிகப்படியான சோம்பு உட்கொள்வது வயிற்றுப் போக்கு மற்றும் குமட்டல் பிரச்சினையை ஏற்படுத்து. கர்ப்பிணி பெண்கள் சோம்பு உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |