சோம்பு மற்றும் கொத்தமல்லி நீர் எந்தெந்தப் பிரச்சனைகளுக்குப் பலனளிக்கும்?
காலையில் எழுந்ததும் கொத்தமல்லி மற்றும் சோம்பு நீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. அதை பற்றி பார்க்கலாம்.

சோம்பு மற்றும் கொத்தமல்லி நீர்
இப்போது மக்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் அவர்கள் அவர்கள் பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் தற்போது விட்டு வைத்தியங்கள் அதிகம் பின்பற்றவும் செய்கின்றனர்.
அதன்படி நமது உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் இரண்டு இயற்கை தண்ணீர் உள்ளது. அதில் ஒன்று பெருஞ்சீரக தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தண்ணீர். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தர உதவும்.
இருப்பினும், அதன் முழுப் பலன்களையும் பெற, அதை எப்போது, எப்படி அருந்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வது முக்கியம். அதை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி நீரின் நன்மைகள்
செரிமானம்: பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி நீர், செரிமானத்திற்கு ஒரு சிறந்த நிவாரணம் தரும் பானமாகும். இதை குடித்தால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வயிறு கனமாக உணர்தல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
நச்சு நீக்கம் மற்றும் எடை குறைப்பு: பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி நீர், உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு நீராகும். இந்த நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை குறைக்க உதவுகிறது. உடலில் இருந்து கெட்ட நீரையும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

உடல் வெப்பநிலையைச் சீராக்குகிறது: பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டும் இயற்கையாகவே குளிர்ச்சி தரும் தன்மை கொண்டவை. இது கோடை காலத்தில் உடல் வெப்பநிலையைச் சீராக்க உதவுகிறது. மேலும், இவை நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றைச் சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது: பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லி நீர், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவுகிறது. மேலும்நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும், இது செரிமானத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

தயாரிக்கும் முறை
பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லித் தண்ணீர் தயாரிக்க முதலில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரக விதைகளை ஒரு குவளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில், இந்தத் தண்ணீரை 5-10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி செய்தால் அதிக நன்மைகளை பெறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |