பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படும் டாப் 3 பெண் ராசிகள் - இவர்கள் உறவாக கிடைப்பதே பெரும் வரம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களின் எதிர்கால வாழ்கை, தொழில், காதல், திருமணம், கல்வி, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பாசத்துக்கான எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அதிகாரத்தால் சாதிக்கவே முடியாத விடயங்களை கூட இவர்ளிடம் பாசம் காட்டி சாதித்துவிடலாம். அப்படி பாசத்துக்கு மாத்திரமே அடிமையாகும் குணம் கொண்ட பெண் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

காதல் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் பெண் ராசியினர் இயல்பாகவே காதல் மற்றும் பாசாத்துக்கு கட்டுப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் சிறந்த மனவலிமையும் தனித்துவமான ஆற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு சற்று திமிரான தோற்றத்துடன் இருந்தாலும், இவர்களிடம் கொஞ்சம் அன்பாக பேசினாாலே போதும் பெட்டி பாம்பாய் அடங்கிவிடுவார்கள்.
இந்த ராசி பெண்கள் யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். தங்களின் சொந்த உழைப்பில் வாழ நினைக்கும் இவர்கள் மற்றவர்களிடம் எதிர்ப்பார்க்கும் ஒரே விடயம் என்றால், அது உண்மையான அன்பு மாத்திரம் தான்.
கன்னி

கன்னி ராசியினர் இயல்பாகவே எந்த விடயத்திலும் நேர்த்தியையும் முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் அவர்களிடம் பாசத்தை காட்டிவிட்டால் போதும் அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்துவிட்டு அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்ய தயாராகிவிடுவார்கள்.
உறவுகளை உயிராக நினைத்து அதிக அக்கறை காட்டு கன்னி ராசியினர் கட்டுப்படும் ஒரே விடயமும் பாசம் தான் என்றால் மிகையாகாது.
துலாம்

துலாம் ராசியினர் இயல்பாகவே எந்த விடயத்திலும் நீதி, நேர்மையுடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எல்லா விடயங்களிலும் விவாதிக்கு இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் அன்பாக பேசிவிட்டால் போதும், அவர்களிடம் மொத்தமாக சரணாகிவிடுவார்கள்.
இந்த ராசியினரிடம் வம்பு செய்து அடைய முடியாத எந்த விடயத்தையும் பாசமாக பேசி செய்துக்கொள்ளலாம்.அனைவரிடமும் பாசமாக பழகி, உறவுகளுக்காக பல தியாகங்கள் செய்யும் ராசிகளின் பட்டியில் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |