இந்த ராசியினரால் முன்னாள் காதலை ஒருபோதும் மறக்கவே முடியாது! நீங்களும் இந்த ராசியா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்கள் வாழ்க்கையுடன் நெருங்கி தொடர்பை கொண்டிருப்பதுடன் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் தங்களின் பழைய காதல் நினைகளை மறக்கவே மாட்டார்களாம்.

அந்த காதலின் மூலம் கிடைத்த அனுபவத்தையும் அன்பையும் அந்த அழகான தருணங்களையும் மறக்க முடியாமல் வாழ்க்கை முழுவதும் நினைவுகளை சுமந்து தவிக்கம் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்

காதலித்த நபரை பிரிந்தாலும் கூட வாழ்க்கை முழுவதும் குறித்த நபரின் நினைவுகளுடனேயே வாழும் ராசிகளின் பட்டியலில் துலாம் முதலிடம் வகிக்கின்றது.
இந்த ராசியினர் மிகவும் உணர்தன்மை கொண்ட மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவுகளை பொக்கிஷமாக மனதில் சுமப்பார்கள்.
இவர்கள் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் அவர்ளை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள் மனதளவில் வெறுக்கவும் மாட்டார்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி காதல் விடயத்தில் மிகவும் உணர்த்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை உண்மையாக காதலித்துவிட்டால், அந்த நபர் துரோகியாக மாறினாலும் கூட இவர்கள் இறுதிவரை அதே காதலுடன் அவர்களின் நினைவுகளை சுமப்பார்கள்.
வாழ்க்கை முழுவதும் தங்களின் பழைய காதலை நினைத்து தங்களின் வாழ்க்கையை வீணடித்துக்கொள்ளும் தன்மை இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
கன்னி

கன்னி ராசியினர் எந்த விடயத்திலும் நேர்த்தியையும், முழுமையையும் எதிர்ப்பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் முதலில் காதலித்த நபரை வாழ்வில் இறுதிவரையில் மறக்கவே மாட்டார்களாம். இவர்களின் காதல் தனித்துவமானதாக இருக்கும்.
வேறு ஒரு துணையுடன் வாழ நேர்ந்தாலும் தனிமையில் இருக்கும் போது பழைய காதலின் நினைவுகளை அசைபோட்டு மகிழ்ச்சியடையும் நபர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |