தொடர்ந்து அசீமிற்கு பதிலடி கொடுத்து வரும் பெண் போட்டியாளர்! இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?
பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அசீமை வெளியேற்ற சில பெண் போட்டியாளர்கள் சதி திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் விட்டு வெளியேறிய பிரபலங்கள்
பிக் பாஸ் சீசன் 6ஆரம்பித்து நான்காவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிறது. அதில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டைவிட்டு ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு என 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் கொடுக்கும் புதிய வகையான டாஸ்க்
இந்நிலையில் பிக் பாஸ் புதிய வகையான டாஸ்க்களை கொடுத்து வருகிறார். மேலும் சமிபத்தில் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்கில் பல பிரபலங்களின் உண்மை முகம் வெளிவந்தது.
இந்நிலையில் அசீம் முன்னாடி சென்று தனலெட்சுமி நடனம் ஆடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Dhana ???
— ToksPav (@Tokyoo_cool) November 3, 2022
Boomersa left handla deal panra sir intha ponnu?#BiggBossTamil6 #Dhanalakshmi pic.twitter.com/NPewh4Nkx3
தொடர்ந்து அசல் கோளாறு வெளியேறிதால் மனதளவில் பாதிப்படைந்த நிவாஷினி அசீமை எலிமினேட் செய்துவிட்டு அசல் கோளாறுவை மீண்டும் வரவழைக்குமாறு பிக்பாஸிடம் வேண்கோள் விடுத்திருந்தார்.
இந்த வீடியோக்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அசீமை வெளியேற்ற சதி திட்டம் தீட்டி வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.