மீண்டும் தலையொங்கும் பிக் பாஸ் வீட்டில் சண்டைகள்! நாகரிகமற்று நடந்து கொள்ளும் போட்டியாளர்..
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு பாரிய சண்டை வெடிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
பிக் பாஸின் புதிய டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது இறுதியாக 19 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு டாஸ்க் கொடுப்பார். இதன்படி இந்த வாரத்திற்கான டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு பொம்மைகள் தரப்பட்டு, இதனுடன் தொடர்புபட்ட டாஸ்க்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அசீமின் நாகரிகமற்ற செயல்
இந்நிலையில் போட்டியாளர்களுக்கிடையில் கடுமையான போட்டிகள் இடம்பெற்று வருகிறது. இதில் அசீம் சக போட்டியாளர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட வருகிறார். இதனால் இந்த வாரம் அசீம் வீட்டைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் அமுதவாணன், செரீனா கையிலுள்ள பொம்மை பிடுங்கியதற்கு அசீம் அமுதவாணனை நக்கல் செய்யும் வகையில் பேசினார் இதனால் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பாரிய சண்டைகள் ஏற்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.