துணை இருந்தும் தனிமையை உணர்றீங்களா? இதுதான் காரணமாம்
மனிதன் எப்போதுமே தனியாகவே இருந்துவிட முடியாது. நிச்சயம் அவனுக்கு அல்லது அவளுக்கு தனது தனிமையை போக்கிக் கொள்ளவும் தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் நிச்சயமாக ஒரு துணை வேண்டும்.
திருமணமான தம்பதியர் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்கும் பொழுது தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ள இலகுவாக இருக்கும். ஆனால், காலம் செல்லச் செல்ல அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிணைப்பும் அரவணைப்பும் படிப்படியாக குறையத் தொடங்கும்.
image - irish Mirror
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களை தனிமை தொற்றிக் கொள்கின்றது.
இந்த தனிமை உணர்வு ஏன் ஏற்படுகின்றது?
உடல் ரீதியில் பிரிந்திருத்தல்
ஏதோ ஒரு காரணத்துக்காக தம்பதியர் இருவரும் தனித்தனி இடங்களில் இருந்தால் தனிமை உணர்வு அவர்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிடும்.
நோய்வாய்ப்படுதல்
தம்பதிகளில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களிடம் இருக்கும் நெருக்கம் குறைவதன் மூலம் தனிமையை உணர ஆரம்பிப்பார்கள்.
image - Best Life
தொடர்பு கொள்ளுதல்
ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளுதல் சரியாக இருக்கும் பட்சத்தில் நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும்.
துணையைக் கொடுமைப்படுத்துதல்
துணையை தவறாக வழிநடத்தும் பொழுது அது மிகுந்த மன உளைச்சலை மற்ற துணைக்கு கொடுப்பதோடு தனிமை உணர்வையும் ஏற்படுத்திவிடும்.