பிரபல இசைநாயகன் பிரமாண்டமான ஸ்டூடியோவில் இத்தனை வசதிகள் உள்ளதா? மெய்சிலிர்க்க வைத்த காணொளி!
தமிழ் சினிமாவில் தன் புதுமையான இசைப் பாணியாலும், இசைக் கோர்ப்பிலும், ஒலிக் கலவைகளிலும், கருவிகளின் பயன்பாட்டிலும் தனித்துவம் மிக்க சிறப்பான அனுபவத்தைத் தந்து இசையின் மழையில் நனைய வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின், இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தாலும், இவரின் மெல்லிய இசைகள் இன்று வரை மனதை வருடக்கூடிய பாடலாக திகழந்து வருகிறது.
ஹாரிஸுக்கான இடம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்களின் பேவரைட் லிஸ்டிலும் அப்படியே இருக்கின்றன. மீண்டும் வந்து தன் இடத்தை நிரப்பிக் கொண்டு ஹாரிஸ் மறு ஓட்டத்தை தொடங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட காணொளியின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜின் பிரமாண்டமான ஸ்டூடியோ எப்படி உள்ளது. அதன் தனி சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றி ஒரு சிறப்பு பார்வையாக விளக்கப்பட்டுள்ளது.