இத விட வேற என்ன வேணும்.. பாசத்திற்காக ஏங்கிய மகளுக்கு அப்பா கொடுத்த சப்ரைஸ்
அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய மகள்களுக்கு அப்பா சப்ரைஸ் கொடுத்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பொதுவாக நடுத்தர குடும்பத்தில் பிறந்த வளரும் குழந்தைகளுக்கு தாய்-தந்தையின் பாசம் முழுமையாக கிடைக்க வாய்ப்பு குறைவு. ஏனெனின் அவர்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் ஓடிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி இருக்கும் பொழுது குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாத நிலை உருவாகும். குழந்தைகளை கூட இரண்டு, மூன்று வருடங்கள் பிரிந்து வாழ வேண்டிய தேவை இருக்கும்.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கமைய நம்முடைய உழைப்பையும் அதிகரித்துக் கொண்டு செல்ல வேண்டும். இதுவே தற்போது சமூகத்தில் பழக்கமாகியுள்ளது.
அப்பா கொடுத்த சப்ரைஸ்

இந்த நிலையில், தந்தையை பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மகள்கள் ஒரு நாள் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டிற்குள் யாரோ இருப்பது போன்ற உணர்வு.
மெதுவாக தேடிக் கொண்டே உள்ளே வந்த மூத்த மகள் அப்படியே அவரின் அம்மாவின் அருகே சென்று பார்க்கிறார், யாரும் இல்லை என சிறு சோகத்துடன் திரும்பும் பொழுது வீட்டின் மூலையில் அப்பா மறைந்து நிற்கிறார்.
அவரை பார்த்தும் இரண்டு மகள்களுக்கும் தாங்க முடியாத மகிழ்ச்சி, தன்னுடைய மகள்களின் ரியாக்ஷனை கண்ட அப்பாவிற்கு அளவில்லாத மகிழ்ச்சி. இப்படி இவர்களுக்கு பாச போராட்டத்தை பார்க்கும் பொழுது காணொளி எடுத்த அம்மாவிற்கே அழுகை வந்திருக்கும்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதை விட உலகில் வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் ஒரு தந்தைக்கு...🥹 pic.twitter.com/dt1h67wMcC
— Basheer Ahmed (@BasheerAhm49289) October 27, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |