கடவுளே அஜித்தே! என ரசிகர்கள் கோஷம்: கவலையில் அறிக்கை வெளியிட்ட அஜித்குமார்
தற்போது அஜித்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடவுளே அஜித்தே என ரசிகர்கள் கோஷம் போடுவது கவலை அடைய செய்துள்ளது,'' என கூறியுள்ளார்.
அஜித்குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக அஜித் குமார் உள்ளார். இவரது ரசிகர்கள் சில சமயங்களில் நடந்து கொள்ளும் விதம் பலருக்கு தொந்தரவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சமிப காலமாக இவர் பொது இடங்களில் செல்லும் போது இவரது ரசிகர்கள் கடவுளே என்று அழைப்பது தன்னை கவலை அடைய செய்துள்ளது என கூறியுள்ளார்.சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளார். அந்த அறிக்கையில் "சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.
எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |