ஒரே படத்தில் உச்சத்திற்கு வந்த ரஜினியை மிஞ்சும் ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தமிழ் சினிமாவில், இன்று முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் சொத்து மதிப்பு
ராகவா லாரன்ஸ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்னர் சூப்பர் சுப்பராயனிடம் கார் கிளீனராக வேலை பார்த்து வந்தவர். இந்த சமயத்தில் இவர் டான்ஸ் ஆடுவதை எதேட்ச்சையாக நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரை அழைத்து வாழ்த்தினார். பின்னர் 'உன் திறமைக்கு நீ பெரிய ஆளா வரணும் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன்' என பெரியமானதோடு கூறினார்.
இதற்கு பின்னர் லாரன்ஸ் டான்சர்ஸ் யூனியனில் சேர உதவினார் ரஜினி காந்த். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ரஜினியின் உழைப்பாளி, ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் போன்ற படங்களில் குரூப் டான்சராக பணியாற்றினார்.
இதன் பின்னர் 1999-ம் ஆண்டு ஸ்பீடு டான்ஸர் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லாரன்ஸுக்கு, தமிழில் வெளியான முனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
இதன் பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இதன் பின்னர் காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை 15 முதல் 20 கோடி பட்ஜட்டில் இயக்கி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படமாக மாற்றினார்.
தமிழை தாண்டி, நடிகர் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா 2 படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார். இது பாரிய வெற்றியில் பல கோடிகளை சம்பாதித்து கொடுத்தது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய உழைப்பால் மட்டும் இன்று உயர்ந்து நிற்கிறார். இவர் ஒரு படம் நடிப்பதற்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அந்த நிலையில் இவரின் சொத்து மதிப்பு மட்டும் ஏராளமாக உள்ளது.
இவருக்கு சொந்தமாக சென்னையில் வீடு, ராகவேந்திரா கோயில் போன்றவை உள்ளது. அதே போல் இவரின் வீட்டில் 4 கார்கள் உள்ளது.
வருடத்திற்கு 30 முதல் 40 கோடி வரை சம்பாதிக்கும் இவர், அதில் பெரும் தொகையை தான் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்திற்கு வழங்குகிறார். நடனத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இலவச நடன வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 60 முதல் 80 கோடி வரை உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |