விவாகரத்திற்கு பின்னர் மீண்டும் இணைந்து பாடிய தம்பதி ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் அவரது முன்னாள் மனைவியான பாடகி சைந்தவி இருவரும் சேர்ந்து ஒரு கச்சேரியில் ஒன்றாக பாடல் பாடி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்,சைந்தவி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர் , நடிகராக இருப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ் இவருடைய மனைவி சைந்தவி ஒரு பாடகியாவார்.
இவர்கள் கடந்த 11 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்து தற்போது 2024 இல் சில மனஸ்தாபங்களின் காரணமாக விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சைந்தவி தன் கணவனை பிரிந்திருந்தாலும் கணவணின் கச்சேரியில் இணைந்து பாடுவதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆண்டு மே மாதம், பிரகாஷும் சைந்தவியும் பிரிந்ததாக அறிவித்தனர்.
அவர்கள் பிரிந்த வதந்திகளை உறுதிப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் . அந்த அறிக்கையில், அவர்கள் நீண்ட யோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பரஸ்பரம் மரியாதை நிமித்தம் மன அமைதிக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரிந்து செல்வதாகவும் அவர் விளக்கினார். அவர் மாற்றத்தின் போது தனியுரிமை கோரினார் . பிரகாஷ் மற்றும் சைந்தவி சிறுவயதில் இருந்தே நண்பர்கள், அவர்கள் 2013 இல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கச்சேரியில் இருவரும் ஒன்றாக 'பிறை தேடும் இரவிலே' பாடலை பாடினர். இந்த பாடல் சைந்தவிக்காக ஜி வி பிரகாஷ் பாடிய பாடலாகும் இதை அவர் பாடியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இதை சமூக வைலத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |