என்னிடம் தவறாக நடந்து கொண்டது இந்த நடிகர் தான்! பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை
நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7 இல் விசித்திரா பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் தப்பாக நடந்ததாக கூறியது விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபலமான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தெரிவு செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் விசித்திராவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயது கூடிய போட்டியாளராக இருந்தார். இதனால் இவர் அதிக நாள் இருக்க மாட்டார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் சுமார் 90 நாட்களை கடந்தும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தான் விசித்திரா ஒரு விஷயத்தை கூறியிருர்தார். முன்னணி நடிகர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும், ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னைப் பலர் முன்னிலையில் அறைந்ததாகவும் நடிகை விசித்ரா கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசித்ரா
அந்த வகையில் விசித்திரா கூறிய விஷயத்தின் அடிப்படையில் பார்த்தால் இவர் குறிப்பிட்ட நடிகர் பாலகிருஷ்ணா என்றும், விசித்ராவை அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பினர்.
இந்த சம்பவம் நடந்த காட்சியையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரப்பினர். இது தொடர்பாக விசித்திரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது 'நான் பிக் பாஸ் இந்த விஷயத்தை கூறியதற்கான காரணம் எல்லா மக்களுக்கும் இந்த விடயம் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான்.
அது மட்டுமல்லாமல் நான் யார் பெரையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் அதை ரசிகர்கள் தேடி எடுத்து விட்டனர். அப்படி அவர்கள் தேடி எடுப்பார்கள் என்றுதான் நான் இந்த நிகழ்ச்சியில் அந்த விஷயத்தை கூறினேன்.
அவர்கள் தேடி எடுத்த விஷயம் உண்மை தான். அது என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது'என விசித்ரா கூறினார்.
அவர் குறிப்பிட்டதை அறிந்த ரசிகர்கள் நடிகை விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறிப்பிட்டது நடிகர் பாலகிருஷ்ணாவைத்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.