பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்! கோபமடைந்த உறவினர்கள்
பிரபல பாடகியும் சிறந்த இசையமைப்பாளருமாகிய இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரின் இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பவதாரணியை பற்றி பயில்வான் ரங்கநாதன் தவறா விஷயம் ஒன்றை சமீபத்தில் கூறியிருந்தார்.
அந்த வகையில் பவதாரணியை பற்றி பயில்வான் கூறுவது பொய் பவதாரணி இறக்கும் முன் நடந்தது இதுதான் என பவதாரிணியின் கணவரின் அண்ணன் பல விஷயங்களை கூறியிருந்தார்.
பவதாரணி
இதனை தொடர்ந்து சபரியின் அண்ணண் கூறுகையில் 'பயில்வான் பவதாரணி தன் கணவரை தனது தந்தைக்காக பிரிந்து விட்டார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.
ஆனால் அதுவெல்லாம் பொய் நிஜத்தில் பவதாரணி தன் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார்.
பவதாரணிக்கு திருமணம் ஆகும் போது வயது 21 மட்டுமே அதனால் பவதாரணி கொஞ்சம் சின்னப்பிள்ளை தனமாக இருந்ததால் அவருக்கு குடும்பத்தை பற்றி பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கும்.
ஆனால் கொஞ்ச நாட்களுக்கு பிறகு பவதாரணி குடும்ப பொறுப்புக்களை உணர்ந்து தன் கணவருடன் சேர்ந்து தான் இருந்தார். சமீபத்தில் தன் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதை தெரிந்து கொண்ட பவதாரணி அவரை நன்றாக பார்த்துகொண்டார்.
சபரிக்கும் பவதாரிணிக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பயில்வான் கூறியதெல்லாம் பொய்.
இளையராஜாக்கு பவதாரணி என்றால் உயிர், அவருக்காக எதையும் செய்வார். சபரி பவதாரணிக்காக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.
பவதாரணிக்கு புற்றுநோய் என்பது கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் தெரியவந்தது. இதனால் சபரி அதிகமாக மனமுடைந்து போனார்.
பிறகு யுவன் ஒரு டாக்டரிடம் பேசி அவர் சொன்னதால் இலங்கைக்கு மருத்துவம் பார்க்க பவதாரணியை அழைத்து சென்றோம்.
ஆனால் அங்கேயும் பவதாரணி சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பவதாரணி இறப்பதற்கு முன்பு சபரியிடம் எனக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி தாங்க, எனக்கு பாடணும் போல இருக்கு என்று சொல்லி இருந்தார்.
அதற்குள் பவதாரணி இறந்து விட்டார். பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாகவே நடிகர் நடிகைகள் பற்றி பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
அது போலத்தான் இப்போது பவதாரணியைப் பற்றி கூட தவறான கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் கூறியது முற்றிலும் பொய்' என பவதாரணியின் கணவரின் அண்ணன் கூறினார்.