புதிதாக குடியேறிய வீட்டின் கூரையில் இருந்து எட்டிப்பார்த்த பாம்புகள்... பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்! ஷாக் கொடுக்கும் புகைப்படம்
அமெரிக்காவில் வீட்டின் மேற்கூரையில் குடும்பமாக வாழ்ந்த பாம்புகள் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டதால் வீட்டை காலி பண்ண சொல்லி வீட்டின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்தவர் ஹாரி பக்லீஸ். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன் குடும்பத்தினருடன் ஒரு வீட்டிற்கு குடியேறியுள்ளார்.
அவர் அந்த வீட்டிற்கு குடியேறியே போதே வீட்டின் மேலேயிருந்து கசிவு ஒன்று இருந்ததை தன் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
SNAKES IN THE ROOF! A LaFayette man says there are snakes in his rental home. Harry Pugliese says problems have persisted at this house on East Villanow Street since February, but the landlord won't fix them. pic.twitter.com/ukVUOStzUm
— Bliss ZechmanNC9 (@BlissZechman) May 25, 2021
இந்நிலையில் அவர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவரது வீட்டின் மேற்கூரையில் சேதம் அதிகமாகி உடைந்துள்ளது.
அதன் பின்பு தான் அந்த மேற் கூரைக்கு மேல் ஒரு பாம்பு குடும்பமே இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வர்களிடம் சொல்லி அந்த பாம்புகளை தன் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் அவர் தன் வீட்டின் மேற்கூரையிலிருந்த பாம்பை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வைரலாக பரவி வருகின்றது.