கோடைக்காலத்திற்கு ஜில் ஜில் ஃபலூடா! நாவுறும் நிறத்தில் செய்வது எப்படி?
பொதுவாக வீட்டிலுள்ளவர்களுக்கு கோடைக்காலத்தில் ஜில்லுனு என்னமாவது குடிக்கனும் போல் இருக்கும்.
அப்போது குளிர்பானங்கள், இளநீர், குளிர்ந்த நீர் ஆகிய பானங்களை எடுத்து கொள்வார்கள்.
இதனையும் தாண்டி வாயிற்கு சுவையான ஐஸ்கீரிம் எல்லாம் சேர்த்து ஒரு ஃபலூடா குடிக்க வேண்டும் என்றால் கடைக்களுக்கு தான் செல்ல வேண்டும்.
இதெல்லாம் தவிர்த்து வாயிற்கு சுவையான ஃபலூடா வீட்டில் செய்யலாம். இது தொடர்பாக மேலதிக தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஐஸ்கிரீம் செய்ய பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்வதற்கு:
வேகவைத்த சேமியா- 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் - 3
முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நன்றாக பாலை ஊற்றி காய்ச்சி கொள்ளவும். பால் காய்ச்சி கொண்டிருக்கும் போது பிரெட் துண்டுகளை அதில் மெது மெதுவாக சேர்த்துக் கொள்ளவும்.
அப்போது பிரெட் பாலில் ஊறும் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து கொள்ளவும். பாலை இறக்கிய பின்னர் ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பால் போல் கலந்து விடவும்.
அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும் இதன்பின்னர் ஐஸ்கிரீமை எடுத்து எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக அடித்து பவுலில் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
கடைசியாக ஒரு நீளமான குவளை போல் இருக்கும் கண்ணாடி கிளாஸை எடுத்து அதில் சேமியா>பழங்கள் >முந்திரி, காய்ந்த திராட்சை >ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி ஆகியவற்றை படிபடியாக ஊற்றி பரிமாறினால் நாவுறும் சுவையில் ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்!