மறந்தும் கூட இந்த பொருட்களை ஃபிரீஸரில் வைக்காதீங்க! ஆபத்தை ஏற்படுத்துமாம்
இன்று பெரும்பாலான மக்களின் பழக்க வழக்கங்கள் மாறிக்கொண்டே இருப்பதால், பல நோய்கள் எளிதில் பின்தொர்ந்து வந்து விடுகின்றது.
இல்லத்தரசிகளுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பல உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு குளிர்சாதனப் பெட்டியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிலும் பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஃபிரீசரில் கொண்டு வைக்கும் பழக்கமும் அதிகமாகியுள்ளது. அவ்வாறு சேர்த்து பொருட்களில் கெடுதல் ஏற்படுத்தும் பொருட்களை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பிரீசரில் வைக்கக்கூடாத பொருட்கள்
பெரும்பாலான வீடுகளில் பால் பொருட்களை நம்முடைய பிரீசரில் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம், அது போன்று ஃபிரீசரில் கீழே இருக்கும் தட்டிலும் பால் பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பெரும் உடல்நலப் பிரச்சினையை கொண்டு வருகின்றதாம்.
இதே போன்று பழங்களையும் ஃபிரீசரிலோ, அதன் கீழ் இருக்கும் தட்டிலோ வைக்கவே கூடாதாம். அவ்வாறு வைத்து அதனை பயன்படுத்தினால், அதன் சுவையும் மாறிவதோடு, சத்துக்களும் அழிந்து விடுகின்றதாம்.
இன்று சமையலுக்கு சாஸ் வகைகளை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு சாஸ் வகைகளையும் பிரீசரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். மீறி வைத்தால் அதில் இருக்கும் மூலப்பொருட்கள் தனித்தனியாக பிரிந்து உடலில் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
நூடுல்ஸ், காபி பவுடர் என பாக்கெட்டில் இருக்கும் பொருட்களையும், தானிய வகைகளையும் வைக்கக்கூடாது. அவ்வாறு தானிய வகைகளை ஃபிரீசரில் வைத்து பயன்படுத்தினால், அதனை அறை வெப்பநிலை வரும் வரை காத்திருந்து பின்பு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
பிரீசரில் வைக்கக்கூடிய பொருட்கள் எவை?
காலிபிளவர்
குடைமிளகாய்
கீரை வகைகள்
இறைச்சி, உப்பு மஞ்சள் கலந்த மீன்
உலர்ந்த திராட்சை, அத்திப் பழம், ஆரஞ்சு
இஞ்சி பூண்டு இவற்றை வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டினை வைத்து 7 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டுமாம். அவ்வாறு செய்யவில்லை எனில் எந்த பலனும் அதில் கிடைக்காது என்றும் கூறப்படுகின்றது.