நடிகை அஞ்சலி என்ன ஆனார்! தற்போது வெளியான மிரட்டல் புகைப்படத்தால் அசந்து போன ரசிகர்கள்
நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபால்’ வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபால்' வெப் தொடரில் நடித்துள்ளார்.
'ஃபால்' வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அஞ்சலி என்ன ஆனார் என்று கேட்டு வந்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் பதில் கொடுத்துள்ளது.