41வது பிறந்தநாளை கொண்டாடும் நஸ்ரியா கணவரா இது? யாரும் பார்த்திராத புகைப்படங்கள்
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவரின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா போன்று மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் பகத் பாசில்.
இவர் தன்னுடைய தீவிர உழைப்பை மாத்திரம் கொண்டு சினிமாவில் சாதித்தவர்.
பகத் பாசில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “ கையேது தூரம்” என்ற படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து வரிசையாக மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் நடித்து விட்டார்.
பகத் பாசிலா இது?
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்த நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, பகத் பாசில் “புஷ்பா 2 ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுவும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினம் பகத் பாசில் அவரின் 41 ஆவது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் பகத் பாசிலின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “பகத் பாசிலா இது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |