ஒரே படத்தால் புகழடைந்த நாயகி! யார் இவர் என்று தெரிகிறதா?
சமீபகாலமாக நாயகன்- நாயகிகளின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இப்படி இருந்த குட்டி பொண்ணா இது என ரசிகர்களே ஆச்சரியப்படும் வகையில் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் பாவாடை சட்டையில் அழகான புன்னகையுடன் இருக்கும் க்யூட் சிறுமியின் புகைப்படம் வைரலாகி வந்தது.
யார் அந்த நாயகி? என தேடிப் பார்த்தால் நமக்கு கிடைத்த விடை தான் மஞ்சிமா மோகன்.
கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.
சிம்புவுக்கு ஜோடியாக ஒரே படத்தில் ஓஹோவேன புகழ்பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகள் அமையவில்லை.
தேவராட்டம் படத்தில் தன்னுடன் நடித்த கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
என் தேவதை, இவள் இல்லாமல் நான் இல்லை என காதலியை உருகி உருகி காதலித்து வருகிறார் கௌதம் கார்த்திக்.
இருவருக்கும் மிக எளிமையான முறையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நடந்து முடிந்தது.
இந்நிலையில் மஞ்சிமா மோகனின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |