அப்பவே செம்ம கியூட்.. குக் வித் கோமாளி பிரபலத்தின் சிறு வயது புகைப்படம்
சமீபக்காலமாக சின்னத்திரை நடிகைகள் மற்றும் சினிமா நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவீனா டாகா
தமிழ் சினிமாவில் ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரவீனா டாகா.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “மௌன ராகம் ” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இந்த சீரியலுக்கு முன்னாள் தங்கம் , பூவே பூச்சூடவா ஆகிய சீரியல்களிலும் நடித்திருந்தார்.மேலும் குக் வித் கோமாளி சீசன் 4 ல் கோமாளியாக அறிமுகமாகி ரசிகர்கள் அனைவரையும் நகைக்க வைத்திருந்தார்.
தற்போது நடிகை மட்டுமல்ல மணியுடன் சேர்ந்து டான்ஸ் நிகழ்ச்சிலும் பங்கேற்று வருகிறார். அத்துடன் மாடலிங் துறையிலும் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
சிறு வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தினமும் ஒரு புகைப்படம் வீதமும் பகிர்ந்து வருகிறார்.
சில புகைப்படங்களை பார்க்கும் போது குழந்தையாக வந்த ரவீனாவா இது என வியக்க வைக்கும் அந்தளவு கவர்ச்சியாக இருக்கும்.
இதன்படி, தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள்,“ சிறு வயதில் நீங்க இவ்வளவு கியூட்டா?” என கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |