Eyebrow Threading செய்ய போறீங்களா? மறந்தும் இத பண்ணிடாதீங்க
கண்களின் அழகை மேம்படுத்திக் காட்டுவதில் புருவங்களுக்கு பெரும் பங்குண்டு. சிலருக்கு புருவங்கள் பெரிதாக அடர்த்தியாக இருக்காது.
ஆனால், ஒரு சிலருக்கு காடு போல் புருவ முடி வளர்ந்திருக்கும். அதை அழகாக மாற்றினால் கண்கள் ஹைலட்டாக தெரியும்.
பெண்கள், தங்களின் புருவங்களை அழகாக மாற்றிக்கொள்ள அழகு நிலையங்களுக்குச் சென்று Threading செய்து கொள்கிறார்கள்.
அவ்வாறு Threading செய்துகொள்ளும் பொழுது அதை சுற்றியிருக்கும் பகுதி சிவந்து, வீங்கும். எரிச்சல், அரிப்பு போன்றவையும் ஏற்படக்கூடும்.
சரி இனி புருவ முடிகளை அழகாக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்...

புருவங்கள் அடர்த்தியாக இருப்பவர்கள் Threading செய்துகொள்வதற்குப் பதிலாக ட்ரிம் செய்துகொள்ளலாம்.
புருவம் திருத்தப்பட்டதன் பின்னர் அந்த இடத்தில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்ய கற்றாழை ஜெல், ஐஸ்கட்டி என்பவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்யக்கூடாதது
Threading செய்துகொள்ள ஆயத்தமானால், முகத்தில் எந்தவிதமான மேக் - அப்பும் இருக்கக்கூடாது.
கண்களுக்கான அழகு சாதனப் பொருட்களான, மஸ்காரா, கண்மை என்று எதையும் உபயோகப்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்காவது இவற்றை தவிர்ப்பது நல்லது.
புருவங்களை Thread செய்துகொள்வதற்கான கால இடைவெளியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் சுயமாக புருவ முடிகளை திருத்த நினைத்தால், அவசரத்தில் ஓரிரு முடிகளை நீக்கிவிட்டால் கூட புருவத்தின் அழகு கெட்டுவிடும்.
புருவங்களை திருத்தியவுடன் ஏதேனும் க்ரீம் அல்லது க்ளென்சர் பயன்படுத்த வேண்டும்போல் இருக்கும். அவ்வாறு இருந்தால் எதையும் பயன்படுத்த வேண்டாம்.
ஏனென்றால், Threading செய்யும்போது ஃபாளிக்கில் திறக்கப்படுவதால் க்ரீம் ஏதேனும் பயன்படுத்தும்போது அந்த இடம் புண்ணாக மாறி தழும்பு ஏற்படக்கூடும்.
