உங்கள் கண் துடித்தால் துரதிர்ஷ்டமா? ஜோதிடம் கூறும் ரகசியம்
உடம்பில் முக்கிய உறுப்பாகவும் உலகத்தை நாம் காண்பதற்கு மட்டுமின்றி வாழ்வதற்கும் கண்கள் மிக அவசியம். அவ்வாறான கண்கள் சில தருணங்களில் துடிப்பதை நாம் உயர்ந்திருப்போம்.
ஆனால் இவ்வாறு கண்கள் துடிப்பதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்களை கூறிவருகின்றனர். இந்த கண் இயக்கங்கள் சாதாரணமாக இருந்தாலும் சிலரின் ஜோதிட ரீதியான நம்பிக்கையாகவும் இருந்துள்ளது.
இங்கு ஆண் பெண் இருபாலருக்கும் வலது மற்றும் இடது கண்கள் துடித்தால் என்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
ஆண்களின் கண் துடித்தால்
ஆண்களுடைய வலது கண் துடித்தால் நல்ல காரியம் நடப்பதுடன், தொழில், வர்த்தகம், வேலை ஆகியவற்றில் நல்ல செய்தியும் வந்து சேருமாம்.
அது வேளை இடது கண் துடித்தால் மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அனுபவப்படும் ஆண்களுக்கு காலம் கடினமான பலன்களை தருவதுடன், கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும்.
பெண்களின் கண் துடித்தால்
பெண்களின் வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்றும், அன்றைய தினத்தில் செய்யும் காரியங்கள் வாய்க்காது... மேலும் மோசமான சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இடது கண் துடித்தால் மிகவும் நல்ல சகுனம்... நல்ல விடயம் குடும்பத்தில் நடப்பதுடன், மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும்.
கண் இமைகள் துடித்தால்
இது போலவே கண் இமைகளுக்கும் ஜோதிட பலன்கள் உள்ளது. உங்களுடைய மேல் கண்ணிமை துடிப்பதாக நீங்கள் உணர்ந்தால் நெருங்கிய உறவினர் ஒரு இறந்த செய்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.