தாகம் அதிகம் எடுக்குதா?, அப்போ கண்டிப்பா உங்க மூளையில் இந்த பிரச்சினை இருக்குமாம் - பகீர் தகவல்!
நிறைய தாகம் எடுத்தால் அது மூளையில் கட்டி இருப்பதற்கான அறிகுறி என பாதிக்கப்பட்டவர் ஒருவர் பேசிய சம்பவம் இணையவாசிகளின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த “ஜானத்தன் ப்ளம்மர்” என்பவருக்கு தற்போது 41 வயதாகின்றது.
இவருக்கு கொஞ்ச நாட்களாக அதீத தாகம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பாராம்.
இதனை தொடர்ந்து இவருக்கு இது ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டு மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளார்.
முதலில் மருத்துவர்கள் சர்க்கரை வியாதி என கணித்தார்கள். ஆனால் பரிசோதனை செகடிவ் என காட்டியது. பின்னர் கண் பரிசோதனை மேற்கொண்டார்கள்.
இதில் இவருக்கு மூளையில் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கட்டி பிட்யூட்டரி க்ளாண்ட் என்ற பகுதியில் இருந்துள்ளது. இதன் காரணமாக தான் ப்ளம்மருக்கு அதிகமான தாகம் ஏற்பட்டுள்ளது.
பிட்யூட்டரி க்ளாண்ட் கட்டியிருந்தால் என்ன நடக்கும்?
மூளையின் பட்டாணி அளவிற்கு தான் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland)பகுதி காணப்படும். இது தாகத்தை அதிகரிக்கும்.
இந்த பகுதியில் கட்டியிருந்ததால் அவர் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் வரை குடித்தார் எனக் கூறப்படுகின்றது.
இந்த கட்டியை அகற்றுவதற்காக ப்ளம்மருக்கு கொடுத்த மாத்திரைகளால் அவருக்கு கிட்டத்தட்ட 114 கிலோ வரை உடல் எடை அதிகரித்துள்ளது.
மேலும் கட்டி எடுத்த பின்னர் கிரிக்கட், ரக்பி ஆகிய விளையாட்டுக்களில் மருத்துவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |