நீரிழிவு நோயை உணவின் மூலம் கட்டுபடுத்தலாமா? நமக்கு தெரியாத சில உண்மைகள்!
ஒரு மனிதனின் உடலில் இன்சுலின் பயன்பாடு குறையும் பொழுது, இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத நிலை ஏற்படும் இதுவே நீரிழிவு நோய் எனப்படுகிறது.
இந்நோயானது நான்கு வகைப்படுகிறது, அதாவது முதல் வகை நீரிழிவு நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் என்பனவாகும். பொதுவாக தமது உடலில் எதாவது நோய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
அந்த வகையில் நீரிழிவு நோயானது அதீத தாகம், வெட்டுக் காயங்கள் குணமடைய அதிக நேரம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் திடீரென உடல் எடை குறைவது/கூடுவது போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும்.
மேலும் இந்நோயின் பாதிப்புகள் என்ன? அதனை எவ்வாறு உணவு பயன்பாட்டின் மூலம் கட்டுபடுத்த முடியும்? என்பதை பார்க்கலாம்.
நீரிழிவு நோயினால் மனித உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்
நீரிழிவு நோயானது மனித உடலிலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது, இதனால் ரத்தம் மிக வேகமாக அசுத்தமடையும், அதனை தடுப்பதற்காக சிறுநீரகங்கள் அதிகமாக செயற்பட ஆரம்பிகிறது.
இதனால் காலப்போக்கில், சிறுநீரகங்களிலுள்ள நுண்ணிய வடிகட்டிகளினுள் காணப்படும் வடிமுடிச்சுகளை சேதப்படுத்துகிறது.
மேலும் குறைந்த இன்சுலின் தொழிற்பட்டால் ஏற்படும் விளைவுகளால் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும். இதனால் காலப்போக்கில் குருதி ஓட்டம் குறைவடைந்து மாரடைப்பு, உயர் இரத்தழுத்தம் போன்ற இதய நோய்கள் தோன்றும்.
நரம்பு தொகுதிகளுக்கு குருதி விநியோகம் குறைவாக காணப்படுவதனால் உடலின் புலனுணர்வு பாதிக்கப்பட்டு கண்பார்வையை குறைவடையச் செய்யும்.
நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தில் பாலியல் உறுப்புக்கள், சிறுநீரகம், கை, கால், தோல் பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்பட்டு, இந்த தொற்றுகள் “பங்கசு நோய்” என்கிற பிரதானமாக நோயை ஏற்படுத்தும்.
பங்கசு நோயினால் உடலில் புண்கள் தோன்றும். இவ்வகைப் புண்கள் குணமடையாது, பாதிக்கப்பட்ட கால் பகுதிகள் வெட்டியகற்ற வேண்டிய நிலையும் ஏற்படுத்தும்
நீரிழிவு நோயை உணவு பயன்பாடு மூலம் கட்டுபடுத்தலாமா?
சிறு தானிய வகை
எமது அன்றாட உணவில் சிறு தானிய வகைகளை சேர்த்துக்கொள்வது சிறந்ததாகும். இதில் வைட்டமின் “பி” கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதனால் ரத்தத்தில் உள்ள ஹோர்மோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது இவ்வாறு குறைப்பதன் மூலம் உடலில் கொழுப்புகள் படிவது தடுக்கப்படும்.
சிறு தானியங்களில் “கிளைசிமிக்” குறியீடு இருப்பதினால் செரிமானத்திற்கான செய்முறைகள் முடியுமான அளவு மெதுவாக நடைபெறும். இதனால் ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு முறையாக பேணப்படும்.
குறிப்பாக “வைகை-2 நீரிழிவு” எனப்படும் நீரிழிவு நோயாளர்கள் தினமும் சிறு தானிய வகைகளை உட்கொள்வதனால் சக்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும்.
மீன்வகைகள்
சாலமோன், மத்தி , ஹெரிங் மற்றும் நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது நன்மையளிக்கும்.
இதில் “ஒமேகா கொழுப்பு” அமிலங்கள் உள்ளன. இவை நீரிழிவு நோயினால் ஏற்படும் “ஹார்ட் அட்டாக் ”இருந்து எம்மை பாதுகாக்க உதவும்.
வெங்காயம்
வெங்காயத்தில் “ஆண்டி ஆக்ஸிடண்ட்“ மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுத்து உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பச்சை கீரை
பச்சை கீரை மற்றும் காய்கறி வகைகளை உணவில் பச்சையாக சேர்த்து கொள்ளவது சிறந்தது. இதனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உதாரணமாக பாகற்காய், தக்காளி, முள்ளங்கி, புடலங்காய், இஞ்சி, காலிபிளவர், சுரைக்காய் போன்றவைகள்.
அதிகப்படியான பச்சை கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை உண்பதால் கண் பார்வைகள் கூர்மைப்படுத்தபடுகிறது மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படகூடிய “கேட்டராக்ட்” போன்ற பிரச்சினைகளை கட்டுபடுத்தும்.
பூண்டு
பூண்டு என்பது மருத்துவம் குணமிக்க மூலிகையாகும். இது உடலிவுள்ள வீக்கம் மற்றும் கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பூண்டை ரசம் மற்றும் உணவு வகைகளில் அடிக்கடி சேர்த்து உண்பதால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
மருத்துவ ஆய்வு
2016 ஆம் ஆண்டு நீரிழிவு நோய் தொடர்பான ஆய்வில், நீரிழிவு நோயால் நேரடியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியன் எட்டியுள்ளது என கண்டறியபட்டுள்ளது.
குறிப்பு - நீரிழிவு நோயால் பாதிக்கபட்டவர்கள் அன்றாடம் நாம் உண்ணும் உணவின் மூலம் நோயின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியும்.