இந்த பொருள் வாங்கி வைங்க... வீட்டுக்குள் கெட்ட சக்தி நுழையாது!
தற்போது நம்மிள் பலர் ஆடம்பரமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் இவைகளுடன் இணைந்து எம்மை சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த சக்திகளின் தாக்கம் நமது முன்னேற்றத்தில் தாக்கம் செலுத்துகிறது.
இப்படி ஒருவர் மீது கண் திருஷ்டி பட்டாலோ அல்லது கெட்ட சக்திகள் அதிகம் சூழ்ந்திருந்தாலோ அது குறித்த நபருக்கு மிகுந்த மன அழுத்தம், மன குழப்பம், மிகுந்த உடல் சோர்வு, வேலைகளில் தொடர் தோல்வி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, கண் திருஷ்டிக்கும், கெட்ட சக்திகள் துரத்தியடிக்கவும் ஒரு பொருள் வீட்டில் வாங்கி வைக்க வேண்டும். கண் திருஷ்டியை விரட்டும் பொருட்களில் ஒன்று தான்c என்று அழைக்கப்படும் கண் திருஷ்டி குவிமாட மரம்.
அந்த வகையில், கண் திருஷ்டி குவிமாட மரம் வீட்டில் வாங்கி வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை பதிவில் பார்க்கலாம்.
கண் திருஷ்டி குவிமாட மரத்தின் பலன்கள்
கண் திருஷ்டி குவிமாட மரம் வீட்டில் ஒரு அலங்காரப் பொருளாகவே பலராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது வீட்டிலுள்ளவர்களுக்கும், வீட்டிற்கும் பல நன்மைகளை செய்கிறது. வீட்டில் எந்தவொரு கெட்ட சக்திகளும் நுழையாமல் பாதுகாப்பு கொடுக்கிறது. அத்துடன் வீட்டில் இந்த மரத்தை வைப்பதால் நேர்மறையான ஆற்றல்கள் நிறைந்திருக்கும்.
அதே போன்று உங்களை உற்சாகப்படுத்தும் நல்ல அதிர்ஷ்டம், மன தெளிவு போன்ற விடயங்களும் கிடைக்கும்.
கண் திருஷ்டி குவிமாட மரத்தை வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ வைக்கும் பொழுது ஒரு வகையான பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். அந்த இடமும் அமைதியாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக கண் திருஷ்டி குவிமாட மரம் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் பொருளாக பலரும் பார்க்கிறார்கள். அதனை வைத்திருக்கும் மனிதரின் வாழ்க்கையில் சமநிலை இருக்கும்.
எங்கு வைக்க வேண்டும்?
கண் திருஷ்டி குவிமாட மரத்தை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ வைக்கலாம். பிரதான நுழைவாயில் இருக்கும் இடத்தில் வைக்கலாம். பணியிடத்தில் வேலைச் செய்யும் மேசையில் வைக்கலாம்.
வீட்டில் இந்த மரத்தை ஜன்னலுக்கு அருகில் அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றல் அதிகரிக்கும்.
வீட்டில் இந்த மரத்தை வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மென்மையான துணிக் கொண்டு சுத்தம் செய்தால் பளபளப்பாகவும் இருக்கும்.
இந்த மரத்திற்கு அருகில் அமரும் போதோ அல்லது அதை கடந்து செல்லும் போதோ, மனதில் பாதுகாப்பையும், சமநிலையையும், வெற்றியையும் விரும்புவது அவசியம். நாம் நினைப்பது தான் அந்த நாளில் நடக்கும். இதனால் நல்லதை நினைத்தால் இன்னும் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).