காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலையில் செய்தால் இத்தனை நன்மைகளா?
உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஒக்சிஜன் கிடைக்கிறது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு அனைவருக்குமே போதுமான நேரம் கிடைப்பதில்லை.
அவ்வாறு கிடைக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்து தங்களது உடலையும் ஆரோக்கியத்தையும் திடமாக வைத்துக் கொள்ளகிறார்கள். ஆனால் ஒரு சிலர் காலையில் நேரமில்லாததால் மாலை நேரங்களில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.
ஆனால் காலையில் செய்யும் உடற்பயிற்சியை விட மாலையில் செய்யும் உடற்பயிற்சியில் நிறைய நன்மைகள் இருக்கிறது என்பது தெரியுமா? இனிமேல் தெரிந்துக் கொள்ளுங்கள்.
மாலையில் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள்
நாள் முழுவதும் வேலை செய்து விட்டு மாலை நேரங்களில் உயடற்பயிற்சி செய்யும் போது மனதில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் இல்லாமல் போய் புத்துணர்ச்சி கிடைக்கும் மேலும், மன அழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
அலுவலகத்தில் பணிசெய்பவர்கள் அல்லது ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு தசைகளில் இறுக்கம் ஏற்படும். இதனால் மாலை வேளையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் இருக்கும் சோர்வுகள் நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
காலையில் உடற்பயிற்சி செய்யும் போது வேலைக்கு செல்லும் பரபரப்பில் உடற்பயிற்சியில் அதிக நாட்டம் இருக்காது அதனால் மாலை நேரத்தில் நீண்ட நேரம் கிடைப்பதால் எவ்வித பரபரப்பும் இல்லாமல் உடற்பயிற்சி செய்யலாம்.
மாலைநேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது மன நெருக்கடி இல்லாமல் சிறப்பாக செயல்பட முடியும்.
மாலையில் உடற்பயிற்சி செய்யும் போது இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கும் தசைகளின் செயற்பாடு விறுவிறுப்பாக இருக்கும். மேலும் மாலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி அடிவயிற்றுக் கொழுப்புக்களை குறைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |