Ethirneechal: குணசேகரன் எதிராக தாயின் வாக்குமூலம்... அனைத்து உண்மையையும் உடைத்த தருணம்
எதிர்நீச்சல் சீரியலில் சக்தியை ஜனனி ஒருவழியாக காப்பாற்றிய நிலையில், விசாலாட்சி அனைத்து உண்மையையும் அறிந்து போலிசாரிடம் அதனை வாக்குமூலமாகவும் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகத்தில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றது. வீட்டில் மருமகள்களை ஆட்டி வைத்த குணசேகரன் தற்போது இருப்பதற்கு இடம் கூட இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றார்.
சக்தியின் நிலைக்கு குணசேகரன் தான் காரணம் என ஜனனி விசாலாட்சியிடம் கூறியுள்ளார். மேலும் சொத்து யார் மூலமாக வந்தது? அந்த தேவகியை குணசேகரன் கொலை செய்தது அனைத்தையும் அவரிடம் கூறியுள்ளார்.

ஜனனி தன்னை அரிவாள் எடுத்து வெட்டுவதற்காக வந்த அறிவுக்கரசியின் கையை உடைத்து சரியான பாடத்தையும் கற்பித்துள்ளார். இந்நிலையில் குணசேகரனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதற்கு போலிசார் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் போலிசாரிடம் தனது மகன் நல்லவன் கிடையாது என்பதையும், தேவகியை எவ்வாறு கொலை செய்தார் என்பதையும் கூறி கதறி அழுதுள்ளார்.
பெற்ற தாயே குணசேகரனுக்கு எதிராக சாட்சி கொடுத்த நிலையில், கதையின் போக்கு அடுத்து என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாயின் இந்த மாற்றத்தினை தெரிந்து கொண்ட குணசேகரன் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றார். இதனால் எதிர்நீச்சல் சீரியலில் கதைக்களம் பயங்கரமாக சூடுபிடித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |