Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா?
அறிவுக்கரசியின் ஆட்டத்திற்கு முடிவுக்கட்டுவதற்காக பொலிஸ் அதிகாரியொருவர் குணசேகரன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியல் முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த குணசேகரன் அறிவுக்கரசியுடன் சேர்ந்து கொண்டு வீட்டிலுள்ள மருமகள்களை வெளியில் அனுப்பி விட்டார். ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என எல்லோரும் அறிவுக்கரசியை முருகன் கோவிலுக்கு போக காசு வாங்க காரில் வந்ததாக கிண்டல் செய்தனர்.
அத்தோடு அவர்களுடைய கலரை பார்த்தாலே தெரியாதா அவர்கள் யாரென்று என கரிகாலன் ஏற்றிவிட அறிவுக்கரசி இன்னும் கோபமானார். வீட்டில் உள்ளவர்களை ஏய்த்துவிட்டு தொழிலதிபராகும் கனவோடு இருக்கும் அவர்களின் கதையை முடிக்காமல் ஓய மாட்டேன் என சபதம் கொண்டு பல வேலைகளை பார்த்து வருகிறார்.
பெண்களின் ஆட்டத்தை முடிக்க நினைத்த குணசேகரன் நந்தினியின் மசாலா கம்பெனி ஆர்டருக்கு ஆப்பு வைத்தார். அதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள பிள்ளைகளை அழைத்த குணசேகரன், அவர்களிடம் பாசமாக இருப்பது போல் நடித்து பேசி வருகிறார்.
“ நீங்க இந்த வீட்டு வாரிசு. உங்கள இப்படி கஷ்டப்பட வைக்க மாட்டோம்..” என பாசமாக பேசி அவர்களை தங்கள் கட்டுக்குள் வைக்க அடுத்தடுத்த வேலைகளை பரபரப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
வஞ்சத்தை கொட்டிய அறிவு
இந்த நிலையில், பெண்களின் முறைப்பாட்டின் படி, பொலிஸ் அதிகாரியொருவர் வீட்டிற்கு நுழைந்து நிலாவிற்கு ஆதரவாக பேசுகிறார். அவரை உள்ளே விடாமல் கதிர் தடுக்கும் பொழுது,“ உங்களுடைய அண்ணன் பிணையில் தான் வெளியில் வந்திருக்கிறார்.
என்னை தடுத்தால் அவருக்கு தான் பிரச்சினை..” என்கிறார். அதுவரை துள்ளிக் கொண்டிருந்த கதிர் பேசாமல் செல்கிறார். ஆனால் இவற்றை பார்த்து கொண்டிருந்த அறிவுக்கரிசி,“ நிலாவும் அவருடைய அப்பாவும் என்ன தொழில் பார்க்கிறார்கள் தெரியுமா?” என கோபமாக கேட்க, அதற்கு பொலிஸ் அதிகாரிக்கு கோபம் வந்து விடுகிறது.
இப்படி மாறி மாறி வாக்குவாதங்கள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுதும் குணசேகரனால் எந்தவித பதிலும் கூற முடியவில்லை.
இனி வரும் காலங்களில் பெண்களுக்கு எதிராக குணசேகரன் என்னென்ன செய்யப் போகிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
