பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று தற்போது 9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா மற்றும் புட்ச் வில்மோரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
இவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்து வந்தனர்.
வெறும் 10 நாட்கள் ஆய்விற்கு சென்ற இவர்கள், அதனை முடித்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்க கோளாறு காரணமாக அங்கேயே தங்கினர்.
கடந்த ஆண்டு செப்டம் மாதம் 7ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.
பூமிக்கு வரும் விண்வெளி வீரர்கள்
இந்நிலையில் நாளை பூமி திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் இருவரை அழைத்து வருவதற்கு எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கள் 9 ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் 4 பேர் சென்றுள்ளனர்.
எலான் மஸ்க் மற்றும் அதிபர் ட்ரம்ப் இவர்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் நன்றி தெரிவிக்கவும் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெறும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்கள் என்றும் இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி விண்வெளியில் 287 நாட்கள் தங்குவதற்கு தலா 1,148 டாலர் என்ற வகையிலும் பெறுவார்களாம். அதாவது இந்திய மதிப்பு ஒரு லட்சம் என்றும் கூறப்படுகின்றது.
விண்வெளியில் புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் மனிதர்களுக்கு எலும்பு அடர்த்தி குறைவதுடன், தசைகள் தளர்ச்சி, கண் பார்வை பிரச்சனை, கண் நரம்புகளில் அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சுனிதாவும், புட்ச் வில்மோரும் சந்திப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
குறித்த பிரச்சனையால் ஒரு இடத்தில் கூட நிற்க முடியாமல் தவிப்பதுடன், புவிஈர்ப்பு சக்திக்கு ஈடுகொடுத்து அவர்களால் நிற்கவும் முடியாது. தற்காலிகமாக நடக்கவும் முடியாமல் அவதிப்படுவார்கள் என்றும் இவை சில பயிற்சிகள் மூலம் படிபடிப்பாக குணமடைகவார்கள் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
