காதலியை ஏமாற்றிய தர்ஷா.. மாமியார் போட்ட பிளான்- சிக்குவாரா?
ரேனுகாவை வீட்டில் முடக்க நினைத்த கதிர், ஞானத்தை தூண்டி விட்டு அந்த வேலையை பார்க்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது..
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகளை எல்லாம் போலீசிடமும் நீதிமன்றத்திலும் கூறி விட்டனர். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்கள் நால்வரும் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். வீட்டின் சமையலறையில் மருமகள்களின் வாழ்க்கையை முடிக்க நினைத்த மாமியாரும் அடங்கி விட்டார்.
மருமகள்களின் செயலால் ஆத்திரமடைந்த ஞானமும், கதிரும் அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் பெயில் கிடைக்க 6 மாதம் போராடி வருகிறார்கள். குணசேகரனை ஏமாற்றி கதிர் அவ்வளவு சொத்தை தன் பெயரில் எழுதி வாங்கியுள்ளார். இதனால் ஞானம் மனமுடைந்து இருக்கிறார்.
தர்ஷாவை வசமாக பிடிக்க போடும் திட்டம்
இந்த நிலையில், தர்ஷாவுக்கு திருமணம் செய்வதற்கு குணசேகரன் முடிவு செய்து விட்டார். அவரின் ஆசைப்படி தர்ஷாவும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு, அடுத்தடுத்து வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படியொரு சமயத்தில் ஞானம்- ரேனுகாவின் ஒரே மகளான ஐஸ்வர்யா காணாமல் போகிறார். அதனை சாக்காக வைத்து ஞானத்தின் மனதை மாற்றி ரேனுகாவை தாக்க கதிர் முடிவு செய்து, அதன்படி ஞானமும் நடந்து கொள்கிறார்.
மருமகள்களாக இந்த வீட்டில் மட்டும் வேலைப் பார்த்து கொண்டு இருக்கும்படி, விசாலாட்சியும் கூறுகிறார். ஞானம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்வதை வீட்டிலுள்ள அனைவரும் பார்த்து வியக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தர்ஷாவை காதலிப்பதாக ஒரு பெண் குணசேகரன் வீட்டிற்குள் வருகிறார். அவர் தன்னை தர்ஷன் ஏமாற்றி விட்டதாக வீட்டிலுள்ளவர்களிடம் கூறி அழுகிறார்.
தர்ஷன் செய்த தவறை அறிந்து கொள்வதற்காக வீட்டிலுள்ளவர்கள் அந்த பெண்ணிற்கு ஒரு திட்டம் போட்டு, தர்ஷாவை தனியாக வரும்படி அழைக்க சொல்கிறார்கள். மருமகள்கள் கூறியது போல் தர்ஷாவும் தனியாக வருவதற்கு ஒப்புக் கொள்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |