சினேகன் மகள்களுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்
சினேகன்- கன்னிகா தம்பதிகளின் மகள்களுக்கு தங்க வலையல்கள் போட்டு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.
சினேகன்
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.
இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
தங்க வளையல் போட்டு பெயர் வைத்த கமல்
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா கர்ப்பமாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் அவருடைய எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் மகள்களுக்கு தங்க வலையல்கள் அணிவித்து பெயர் வைத்த படங்களை பகிர்ந்துள்ளார்.
சினேகன்- கன்னிகாவின் காதல் பயணத்திற்கு ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது. அது தான் அவர்களின் இரண்டு மகள்கள். அவர்களுக்கு "காதல்" கன்னிகா சினேகன், "கவிதை " கன்னிகா சினேகன் என பெயர்கள் வைத்துள்ளார்.
இந்த பெயர்களை பார்த்த இணையவாசிகள், “உயிர்- உலக் என நயன்தாரா பானியில் வைக்கப்பட்டதா?” என கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |