Ethirneechal: பார்கவிக்கு மற்றுமொரு இழப்பு.. குணசேகரன் வேட்டையில் பறிபோன உயிர்
சீரியலில் பார்கவிக்கு துணையாக நின்ற ஜீவானந்தம் உயிர் சென்று விட்டதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார். இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.

இது தெரியாத குணசேகரன் ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக போலீஸ்க்காரர்களை அவர் இருக்கும் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள்.
ஜீவானந்தம் உயிர் பிரிந்தாரா?
இந்த நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிக் கொண்டிருந்த பார்கவி, ஜீவானந்தம் இருவரில் ஜீவானந்தம் மீது துப்பாக்கி குண்டு துளைத்துள்ளது.

அதன் பின்னர் ஜீவானந்தத்தால் நகர முடியாமல் ஒரு ஆற்றில் ரத்தம் வடிய மயங்கி கிடக்கிறார். பார்கவியால் அவரை காப்பாற்ற முடியவில்லை, இதனை பார்த்த பார்கவி, “ எல்லாம் என்னால் தான்..” கதறியழுகிறார்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் ஜனனிக்கு ஜீவானந்தம் மற்றும் பார்கவியின் உயிருக்கு ஆபத்து என்ற எண்ணம் வந்து கொண்டே இருப்பதால் காரை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        