Singappenne: தருணம் பார்த்து சொதப்பும் கருணாகரன் - உண்மையை உடைக்கும் மித்ரா
கருணாகரனுக்கு ஆனந்தியின் கர்ப்ப விஷயம் தெரிய வருகின்றது. இந்த நிலையில் மித்ரா இந்த உண்மையை மகேஷ்க்கு தெரிய விடாமல் தடுக்கின்றார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த சீரியலின் கதைக்களம் ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண பெண் நகரத்திற்கு வந்து அங்குள்ள பிரச்சனைகளை சமாளித்து தன் குடும்பத்தை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது.
இந்த துணிச்சல் எல்லா பெண்களுக்கும் வராது. அதனால் தான் இந்த சீரியல் சிங்கப்பெண்ணே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் ஒரு கதாநாயகி மற்றும் இரு கதாநாயகர்கள் இருக்கின்றனர். இதில கதாநாயகி ஆனந்தி கர்ப்மாக இருக்கும் விடயம் மகேஷ் தவிர மற்ற அனைவருக்கும் தெரிய வருகின்றது.
கருணாகரனுக்கு தெரிந்த உண்மை
கம்பனியில் இருந்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து மகேஷ் ஒரு விழா போல எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடகிறார்.
அப்படி இருக்கையில் அங்கே வைத்து விளையாடும் போது ஆனந்திக்கு தலைசுற்றல் வந்து வாந்தி வருகின்றது.
இதை அங்கிருந்த அனைவரும் இது கர்ப்பத்தினால் தான் நடக்கிறது என அறிந்து ஒரு எலுமிச்சையை கையில் கொடுக்க கருணாகரனுக்கு சந்தேகம் வருகின்றது.
கருணாகரன் சுதாவை கூப்பிட்டு அனந்திக்கு என்ன பிரச்சனை என கெட்க சுதா அவர் கர்ப்பமாக இருக்கிறார் என உண்மையை கூறிவிட்டார்.
அப்படி உண்மை தெரிய வந்த கருணாகரன் அதை மகேஷிடம் சொல்லப்போவதாக மித்ராவிடம் கூறுகிறார். இனி மித்ராவின் புதிய திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |