Samayal Express: ஓசில கிடைச்சா நல்லா சாப்புடுற... மைனா நந்தினி- ஷாலின் சோயா அலப்பறைகள்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக நடிகை மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஷ்வரன் பங்கேற்றனர்.
இந்நிகழ்சியின் போது ஏற்பட்ட நகைச்சுவை கலாட்டா காட்சிகள் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.
சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.

மைனா நந்தினி - யோகேஷ்வரன்
இந்நிலையில் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகை மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஷ்வரன் பங்கேற்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த எப்பிசோட் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 1.30 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        