எதிர்நீச்சல் சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் தேவயானி... யாரும் அறியாத டுவிஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் வடிவுக்கரசி மற்றும் தேவயானி இருவரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் விரும்பி பார்தது வருகின்றனர். பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக இருக்கும் இந்த சீரியல் மக்கள் மிகவும் பிரபலமாகி உள்ளது.
அதிலும் சமீபத்தில் கரிகாலன் ஆதிரையை திருமணம் செய்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வீட்டில் சொத்து பிரச்சினை நடந்து வரும் நிலையில், புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆண்களுக்கு எதிராக வாய் திறக்காத மருமகள்கள் தற்போது தங்களது உரிமைக்காக எதிர்த்து நின்று தைரியமாக பேசி வருகின்றனர். ஐஸ்வர்யா வயதுக்கு வந்ததை மூன்று நாட்கள் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். ஏனெனில் தனக்கும் சடங்கு வைத்து யாரையாவது மாப்பிள்ளை என்று அழைத்து வந்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
தேவயானி, வடிவுக்கரசி வருகின்றனரா?
இந்நிலையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் ஐஸ்வர்யா ரத்தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் பின்னே ஏதோ நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது போன்று தெரியவந்துள்ளது. மேலும் நடிகைகள் தேவயானி, வடிவுக்கரசி இவர்களுடனும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
பெரியப்பா மற்றும் பெரியம்மா இருவரும் இருக்கின்றது. ஐஸ்வர்யாவிற்கு சடங்கு செய்யும் நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக வடிவுக்கரசி, தேவயானி வருகின்றனரா என்று ரசிகர்கள் தனது யூகத்தை முன்வைத்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |