Ethirneechal: குணசேகரன் வருகையால் அதிர்ந்து நிற்கும் குடும்பம்... மீண்டும் ஒன்று சேரும் கூட்டணி
எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை வீட்டிற்கு வராமல் இருந்த குணசேகரன் தற்போது வீட்டிற்குள் வந்துள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பாராத பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
குணசேகரன் அறிவுக்கரசியுடன் சேர்ந்து கொண்டு அவரது தங்கையை தனது மகன் தர்ஷனுக்கு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்திருந்தார்.

ஆனால் தர்ஷன் பார்கவியை காதலித்து வந்த நிலையில், கடைசி நொடியில் அனைத்தையும் ஜனனி தவிடுபொடியாக்கி தர்ஷன் பார்கவி திருமணத்தை குணசேகரன் சம்மதத்துடன் செய்து முடித்தார்.
இதனால் தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிய குணசேகரன் தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார்.
தற்போதும் அறிவுக்கரசியின் தங்கை அன்புக்கரசியும் குணசேகரன் வீட்டில் காணப்படுகின்றார். வீட்டில் மீண்டும் ஒரே கூட்டணி சேர்ந்துள்ளதால், அடுத்த சதி திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |